சசிகலா உறவினர்களின் இடங்களில் நடந்த வருமான வரி சோதனை முடிவடைந்தது

--

சென்னை

சிகலாவின் உறவினர்கள், நன்பர்கள், ஊழியர்களின் வீட்டில் நிகழ்ந்த வருமான வரி சோதனை முடிவுற்றதாக தகவல் வந்துள்ளாது.

சசிகலா சம்பந்தப்பட்ட பல இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரி சோதனைகள் நிகழ்ந்தன.  ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் நமது எம் ஜி ஆர் நாளிதழ் அலுவலகம்,  தினகரன், விவேக், கிருஷ்ணப்ரியா ஆகியோரின் இல்லத்தில் நடந்த சோதனைகள் என சுமார் 180 இடங்களில் 1800க்கும் மேற்பட்ட அதிகாரிகளால் சோதனை நடைபெற்றது.

தற்போது இந்த வருமான வரி சோதனை முழுமையாக நிறைவு பெற்றுள்ளது என ஒரு தகவர் தெரிவிக்கிறது.   சோதனையில் கைப்பற்றப் பட்ட ஆவணங்களை சரி பார்க்கும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

கைப்பற்றப் பட்ட ஆவணங்கள், மற்றும் பணம், நகைகள் பற்றிய எந்த ஒரு விவரமும் இதுவரை அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.