சரவண பவன், அஞ்சப்பர், ஹாட்சிப்ஸ்: பிரபல ஓட்டல்களில் வருமானவரித் துறை ரெய்டு!

சென்னை

பிரபலமான ஓட்டல்கள் மற்றும் ஒட்டல் முதலாளிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை மற்றும் தமிழகத்தில் பிரபலமான ஓட்டல்களான சரவண பவன், அஞ்சப்பர், ஹாட் சிப்ஸ், கிரான்ட் ஸ்வீட்ஸ் போன்ற ஓட்டல்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு காரணமாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள சரவணபவன் ஓட்டல்கள் மற்றும் சரவணபவன் நிர்வாகியான ராஜகோபா லுக்கு சொந்தமான சென்னை கே.கே.நகர் வீடு மற்றும் அவரது மகன்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடை பெற்று வருகிறது.

அதுபோல பிரபல அசைவ உணவுகமான அஞ்சப்பர் ஓட்டல்கள் மற்றும் நிர்வாகியின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும், ஹாட் சிப்ஸ், கிரான்ட் சுவீட்ஸ் போன்ற பிரபல ஓட்டல்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை முதலே பெங்களூருவில் பிரபல நடிகர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.