பெங்களூரு

மெடிகல் செண்டர்களுடன் தொடர்பு கொண்டு ரூ.100 கோடி வரை மருத்துவர்கள் கருப்புப் பணம் சேர்த்து வைத்துள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

மெடிகல் செண்டர்கள் எனப்படும் மருத்துவப் பரிசோதனை நிலையங்களுக்கு பரிசோதனைக்காக நோயாளிகளை மருத்துவர்கள் அனுப்புவது வழக்கம்.   அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பரிசோதனை நிலையங்களை மட்டும் மருத்துவர்கள் குறிப்பிட்டுமக்களை அனுப்பி வைப்பதும் வழக்கமாக உள்ளது.   நோயாளிகளும் மருத்துவர் குறிப்பிடும் அந்தப் பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்துக் கொள்வார்கள்.

சமீபத்தில் பெங்களூருவில் இது போல பரிசோதனை மையங்கள் நிகழ்த்தி வரும் ஒரு மையத்தின் இரு கருத்தரிப்பு பரிசோதனை மையத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நிகழ்த்தியுள்ளனர்.  அப்போது கணக்கில் வராத ரொக்கம் ரூ.1.4 கோடியும் 3.5 கிலோ எடையுள்ள தங்க நகைகளும் சிக்கி உள்ளன.    மற்றும் பல வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டுப் பணம் செலுத்தப்பட்டதும் வெளிநாட்டு பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது  இது குறித்து சந்தேகம் அடைந்த வருமான வரி அதிகாரிகள் அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது ஊழியர்கள் பல தகவல்களை தெரிவித்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.  அதிகாரிகளில் ஒருவர், “மருத்துவர்கள் சோதனை நிலையங்களுக்க் சோதனைக்கு அனுப்பப் படும் நோயாளிகளிடம் இருந்து பெறப்படும் கட்டணத்தில் கமிஷன் பெற்று வருகின்றனர்.   அது தவிர கணக்கில் காட்டாமல் போலி ரசீது மூலம் இந்தக் கட்டணம் வசூலிக்கப் பட்டுள்ளது.   கணக்கில் கட்டப்ப்பட்டு வசூலிக்கப் படும் கட்டணங்களுக்கான கமிஷன் நகைகளாக அளிக்கப் படுகின்றன.  இதை வியாபார முன்னேற்ற செலவு என கணக்கு காட்டி உள்ளனர்.

இதுவரை ரூ.200 கோடி வரை இது போல கணக்கில் காட்டாத வருமானத்தை ஈட்டி உள்ள இந்த சோதனை மையங்கள் அதில் ரூ.100 கோடி வரை மருத்துவர்களுக்கு அளித்துள்ளது.   இந்தப் பணம் மருத்துவர்கள் கணக்கில் காட்டாமல் கருப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ளனர்.  எந்தெந்த மருத்துவருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பது ஆரயப் பட்டு வருகிறது.  இரு மையங்கலில் மட்டும் இவ்வளவு கருப்புப் பணம் என்னும் போது நாட்டில் உள்ள அத்தனை மையங்களையும் சோதனை இட்டால் பல்லாயிரம் கோடிக் கணக்கில் கருப்புப் பணம் கண்டுபிடிக்கப் படலாம்” என தெரிவித்துள்ளார்.