டில்லி

சொத்து வாங்கும் போது ரூ. 20000க்கு அதிகமான தொகைக்கு ரொக்க பரிவர்த்தனை செய்வோருக்கு வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்ப உள்ளது.

கருப்புப் பணம் மூலம் சொத்துக்களை வாங்குவதாக எழுந்த புகார்களை ஒட்டி கட்னத 2015ல் மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. அதே ஆண்டு ஜூன் 1 முதல் அமுலான இந்த சட்டத்தின்படி ”வீடு மற்றும் நிலம் ஆகிய சொத்துக்கள் வாங்கும் போது ரூ.20000 வரையிலான பணம் மட்டுமே ரொக்க பரிவர்த்தனை செய்ய முடியும்.

ரூ. 20000க்கு மேல் தொகை செலுத்த வேண்டி இருந்தால் அந்த தொகை கோடிட்ட காசோலை, ஆர் டி ஜி எஸ் அல்லது மின்னனு பரிவர்த்தனை ஆகியவைகள் மூலமே செலுத்த வேண்டும். ரூ. 20000க்கும் அதிகமான தொகைக்கு ரொக்க பரிவர்த்தனை செய்வோருக்கு கொடுத்த தொகைக்கு சமமான அபராதம் விதிக்கப்படும்” என உள்ளது

இந்த சட்டத்தின் அடிப்படியில் டில்லி பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை இட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதிக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட அத்தனை பத்திரங்களும் சோதனை இடப்பட்டுள்ளன. அதன்படி ரூ.20000 க்கு மேல் ரொக்க பரிவர்த்தனை செய்தவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட உள்ளது.

இந்த நோட்டிஸ் மூலம் அவர்களை உடனடியக அபராதம் செலுத்த கூறியும் இந்த தொகைக்கான வருமானத்துக்கான சான்றையும் வருமான வரித்துறை கேட்க உள்ளது.