அது ஒரு பொன்மாலை பொழுது….. நாடகம் பார்த்த ரஜினி… நாட்டியம் ஆடிய சுஹாசினி..

டந்த ஞாயிற்றுக்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும், நடிகை சுஹாசினிக் கும் பொன் மாலை பொழுதுகளாய் இருந்திருக்கும்.

ரஜினிகாந்தின் சகலை ஒய்.ஜி.மகேந்திரா சினிமாவில் மட்டுமல்லாது-  ‘ஸ்டேஜ்’களிலும் கவனம் செலுத்தி வருபவர்.

அப்பா பார்த்தசாரதிக்கும், அவருக்கும் நாடக மேடை –

என்பது தாய் வீடு .

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒய்.ஜி.மகேந்திராவின் ’3 ஜி’ என்ற நாடகம் சென்னை பாரத் கலாச்சாரில் நடைபெற்றது.

நாடகம் பார்க்க தனது மனைவி லதாவுடன் வந்திருந்து ‘ஆடியன்சை’ இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் சூப்பர் ஸ்டார். முழு நாடகத்தையும் ரசித்து பார்த்த வர், நிறைவாக மேடை ஏறி மகேந்திரா மற்றும் நாடக குழுவினர் அனைவரையும் பாராட்டி புகழ்ந்தார்.

அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.நாடகம் பார்க்க வந்திருந்த ரசிகர்கள்,ஆடியன்ஸ் ஆகியோர் எடுத்த  ‘செல்பி’ களுக்கு பொறுமையாக ‘போஸ்’ கொடுத்து அதன் பின்னரே வீட்டுக்கு கிளம்பினார்.

இனி சுஹாசினியின்  நாட்டியம்.

சொந்த ஊரான பரமக்குடியில் இருந்து 13 வயதில் சென்னைக்கு வந்தவர் சுஹாசினி.ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில்(தற்போது கமலஹாசனின் அலுவலகம்) தாத்தா-பாட்டி,சித்தப்பா என கூட்டுக்குடும்பமாக இருந்தனர்.

அப்போது சுஹாசினி-பரத நாட்டியம் கற்றுக்கொண்டிருந்தார்.அரங்கேற் றம் நடக்கவில்லை. அந்த சமயத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சுஹாசினியின் பாட்டிக்கு –பேத்தியின் நாட்டியத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை.

எல்டாம்ஸ் சாலை வீட்டிலேயே –பாட்டிக்காக பரதநாட்டியத்தை அரங்கேற்றினார்-சுஹாசினி.

இது நடந்தது -1976 ஆம் ஆண்டு.

அதன் பிறகு 43 ஆண்டுகள் கழித்து கடந்த ஞாயிறு அன்று சென்னையில் உள்ள சரசலயா நாட்டியப்பள்ளியில் –அதன் பவள விழாவை முன்னிட்டு மீண்டும் சுஹாசினி நாட்டியம் ஆடியுள்ளார்.

கணவர் மணிரத்னம், மற்றும் குடும்பத்தினர் விழாவில் பங்கேற்றனர்.

–பாப்பாங்குளம் பாரதி

Leave a Reply

Your email address will not be published.