சில்வர் ஜுப்ளி: சுந்தர் சி காதலை வெளிப்படுத்திய நாளை சிலிர்ப்பாக கொண்டாடும் குஷ்பு….

மிழ் சினிமாவில் 1980 ஆண்டு காலங்களின்போது திரையில் ஜொலித்த நட்சத்திரங்கள் இன்றுவரை தங்களது நட்புகளை தொடர்ந்து வருகின்றனர்… அவ்வப்போது சந்தித்தும் அளவளாவி வருகின்றனர்….

அப்போதைய திரையுலகில், அதாவது  80 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் நடிகைகளில் குஷ்புவுக்கு தனி இடம் உண்டு…   பின்னர் இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்ட நிலையில், சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டு, சீரியல் உள்பட பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இன்று நடிகை குஷ்புவுக்கு அவரது கணவர் சுந்தர் சி காதலை வெளிப்படுத்திய நாள்… இன்றைய தினம் 25வது காதலர் தினம் நடிகை குஷ்புவுக்கு… அதாவது  சில்வர் ஜுப்ளி. .. இந்த நாளை ஆண்டுதோறும் நினைவுபடுத்தும் குஷ்பு,  தனது கணவர் மற்றும் குழந்தை களுடன் மகிழ்ச்சியாக அமர்க்களமாக கொண்டாடி வருகிறார்.

தனது கணவர் குறித்து டிவிட்டர் பக்கத்தில் குஷ்பு பெருமையாக பதிவிட்டு உள்ளார்… அதில்,

இதே நாளில், 25 வருடங்களுக்கு முன்பு, நீங்கள் என்னிடம் காதலை  வெளிப்படுத்தினீர்கள்… இத்தனை  ஆண்டுகளில் உங்களின் படங்கள் தவிர வேறு எதுவும் மாறவில்லை. நான் இன்னும் உங்களை நேசிக்கிறேன். நான் உங்கள் கண்களைப் பார்க்கும்போது நீங்கள் இன்னும் என்னை வெட்கப்பட வைக்கிறீர்கள்…  நீங்கள் சிரிக்கும்போது நான் இன்னும் பலவீனமடைகிறது… , நீங்கள் எப்போதும் என்னுடையவர்தான்….  என்று தெரிவித்து உள்ளார்.

அத்துடன் 25ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் இருவரும் இருக்கும் படத்தையும், தற்போதைய படத்தையும் இணைத்து உள்ளார்…

இது வைரலாகி வருகிறது… குஷ்புக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது…