2010ல் ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் இல்லை : நீதிமன்ற தீர்ப்பு

மிலன், இத்தாலி

டந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவின் முக்கிய பிரமுகர்களுக்காக ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் இல்லை என இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்  பயணம் செய்ய ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்தது.   அதற்காக இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தில் டம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.   இந்த நிறுவனத்திடம் இருண்டு 12 ஏ டபிள்யூ 101 என்னும் அதி நவீன 12 ஹெலிகாப்டர்களை ரூ. 3600 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் இடப்பட்டது.

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனம் முதலில் 3 ஹெலிகாப்டர்கள் வழங்கியது.    மீதமுள்ள 9 ஹெலிகாப்டர்கள் தயாராகி வந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த சிலருக்கு ரூ.400 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.   அதை ஒட்டி 2014 ஆம் வருடம் அப்போதைய மத்திய அரசு  இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.   இது குறித்து விசாரிக்க இத்தாலியில் மிலன் நகரில் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

இந்த வழக்கை ஒட்டி அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின் தலைவர் ஜிசுபி ஒரிசி கைது செய்யபட்டார்.   இந்த வழக்கின் விசாரணை முடிந்து மிலன் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி உள்ளது.    ஏற்கனவே ஜிசுபி ஒரிசி குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததற்கான எவ்வித தடயமும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து இந்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது.   இந்த நீதிமன்ற தீர்ப்பு வழக்கு விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  சமீபத்தில் இந்த முறைகேட்டில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சம்மந்த்ப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.  ஆனால் அப்படி ஒரு முறைகேடு நடைபெற்றதற்கான தடயமே இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.