கொரோனாவால் பாதிக்கப்பட்ட இத்தாலி பாதிரியாரும் மரணம்…

த்தாலியில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 72 வயதான பாதிரியாக கியூசெப் பெரார்டெல்லி  சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இத்தாலியில் கடுமையான உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. அங்கு பொதுமக்களும், அரசும் முறையான முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்காத நிலையில், வைரசின் பாதிப்பு எல்லைமீறி போயுள்ளது.

அங்கு கொரோனா பாதிப்புக்கு இதுவரை  63,927 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை,  6,077 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 72 வயதான பிரான்சிஸ் கியூசெப் பெரார்டெல்லி கொரோனா வைரஸால் இறந்துள்ளார். இவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நிலையில், அது தேவையில்லை என்று கூறியவர், தற்போது மரணமடைந்துள்ளார்.

வடக்கு இத்தாலியின் பெர்கமோ மாகாணத்தில் உள்ள காஸ்னிகோவைச் சேர்ந்தவர்.

இந்த தகவலை  இத்தாலிய செய்தி வலைத்தளமான அரபெராரா  உறுதி செய்துள்ளது. அமெரிக்கா பத்திரிகையின் மூத்த ஆசிரியரும், வத்திக்கானில் உள்ள தகவல் தொடர்புக்கான ஆலோசகரின் ஆலோசகருமான ஜேம்ஸ் மார்ட்டின், எஸ்.ஜே. இதை டிவிட் மூலம் உறுதி செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டுவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில்  இருந்து நம்மை  பாதுகாப்போம்…