இத்தாலி பூகம்பம்: இடிபாடுகளுக்குள் 9 நாட்கள் உயிருடன் இருந்த நாய்!

 

 

த்தாலி பூகம்பத்தில் சிக்கி இடிபாடுகளுக்குள் 9 நாட்களாக உயிருடன் இருந்த ரோமியோ என்ற நாயை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

1dog

சமீபத்தில் மத்திய இத்தாலியை குலுக்கிய பூகம்பத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தது நினை விருக்கலாம். அங்கு மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.  மீட்புப் படையினர் ஒரு வீட்டின் இடிபாடுகளை அகற்றிக்கொண்டிருந்த போது செங்கற் குவியலுக்குள் உள்ளே இருந்து ஒரு நாய் குலைக்கும் சத்தம் கேட்டிருக்கிறது.

செங்கற்குவியலை அகற்றிவிட்டு  பார்த்தபோது ஒரு கம்பீரமான கோல்டன் ரிட்ரீவர் நாய் உள்ளே இருந்தது தெரியவந்துள்ளது. 9 நாட்களாக இடிபாடுகளுக்குள் உயிருடன் இருந்த அந்த நாயின் பெயர் ரோமியோ. அது இப்போது தனது எஜமானருடன் சேர்ந்து விட்டதாகவும், நலமுடன் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளளது.

கார்ட்டூன் கேலரி