இத்தாலி:
த்தாலியில் ஏற்பட்ட பூகம்பத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு, உதவுவதற்காக மக்கள் தங்களின் வைபை பாஸ்வேர்டுகளை நீக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த புதனன்று மத்திய இத்தாலியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில்  சுமார்120 பேர் உயிரிழந்தனர். இன்னும் நூற்றுக்கணக்கானோரின் நிலை என்ன ஆனதென்று தெரியவில்லை. இத்தாலிய செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீட்புப் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன.
itlay
இந்நிலையில் பூகம்பத்தில் சிக்கிய தங்கள் சொந்த பந்தங்களின் நிலையை அறிய பலரும் தொலைபேசியை பயன்படுத்துவதால் கடுமையான தொலைத்தொடர்பு நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இச்சூழலை சமாளிக்க ‘உங்கள் வைஃபை பாஸ்வேர்டுகளை நீக்கி உங்கள் இண்டர்நெட்டைக் கொஞ்சம் திறந்து வையுங்கள்’ என்று அப்பகுதிவாசிகளுக்கு ஒரு விநோதமான கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன்மூலம் தொலைபேசியில் தொடர்பு கொள்ள இயலாவிட்டாலும் ஆங்காங்கே மீட்பு பணியில் ஈடுபட்டிருப்பவர்களால் வாட்ஸப், ஸ்கைப் போன்ற இணைய வசதிகளைப் பயன்படுத்தி மீட்புபணியை துரிதப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.
இதில் ஒரு சிக்கலும் உள்ளது. வைஃபையைத் திறந்து வைப்பதால் ஒருவர் தனது ஆன்லைன் வங்கி விபரங்கள் உள்ளிட்ட முக்கியமான டேட்டாக்களை ஹேக்கர்களிடம் பறிகொடுக்க நேரிடலாம். இதைத் தடுக்க பாஸ்வேர்டுகளை நீக்கியபின் ஆன்லைன் பேங்கிங் வசதிகளைப் பயன்படுத்த வேண்டாம். இந்த சின்ன தியாகத்தின் மூலம் நீங்கள் பெரிய சேவை செய்ய முடியும் என்று அப்பகுதிவாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.