இப்போதெல்லாம் பக்கம் பக்கமாக இரங்கல் செய்திகள் – எல்லாம் இத்தாலியில்தான்..!

ரோம்: இத்தாலி நாட்டை துவம்சம் செய்துவரும் கொரோனாவின் கோரத்தாண்டவம் குறித்து அறிந்துகொள்ள அந்நாட்டின் ஒரு செய்தித்தாளே சாட்சியம் கூறுவதாய் உள்ளது.

கொரோனா தொற்றால், சீனாவுக்கு அடுத்து மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது இத்தாலி. அந்த நாட்டின் பெரும்பகுதிகள், கிட்டத்தட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுபோல் இருக்கின்றன.

இதுவரை, அங்கே கொரோனா தொற்றால் 1000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், 20000க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், அங்கு வெளியாகும் ஒரு செய்தித்தாள் நிலவரத்தைக் கேட்போம். பிப்ரவரி 9ம் தேதியிட்ட நிலவரப்படி, அத்தாளில் வெறும் 1.5 பக்க அளவிலேயே இரங்கல் செய்திகள் இடம்பெற்றிருந்தன.

ஆனால், மார்ச் 13ம் தேதி நிலவரப்படி, அச்செய்தித்தாளில் 10 பக்க அளவிற்கு இரங்கல் செய்திகள் இடம்பெற்றிருந்தன. இத்தாலியில் கொரோனா ஆடிவரும் கோரத்தாண்டவத்தை அறிய இதுவே சிறந்த சாட்சி என்று கூறப்படுகிறது.

கீழ்காணும் வீடியோ இணைப்பைக் காண்க;
https://twitter.com/balajis/status/1238898901731569666?s=20