இத்தாலி ஓபன் – இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ருமேனியாவின் சிமோனா ஹாலெப்!

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார் ருமேனியா நாட்டின் சிமோனா ஹாலெப்.

இத்தொடரில், பெண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியொன்றில், ருமோனியாவின் சிமோனா ஹாலெப், ஸ்பெயின் நாட்டின் முகுருஜாவை எதிர்கொண்டார்.

இதில் முதல் 6-3 என்ற கணக்கில் செட் ஹாலெப் வசமானது. அதேசமயம், இரண்டாவது செட்டை 6-4 என்று கைப்பற்றி முகுருஜா பதிலடி கொடுக்க, வெற்றிக்கான கடைசி செட்டை 6-4 என்று கைப்பற்றி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ஹாலெப்.