ரோம்:
னவரி மாத இறுதிக்குள் 1.7 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்க திட்டம் என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் 1.7 மில்லியன் இத்தாலியர்களுக்கு கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி போடப்படும் என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது.
இத்தாலியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தின்கீழ் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், 1.7 மில்லியன் மக்களுக்கு ஜனவரி மாத இறுதிக்குள் தடுப்பூசி போடப்படும் என்றும் நேற்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது.
ஃபைசரின் தடுப்பூசிகள் தற்போது 90 சதவீத செயல் திறன் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதால், டிசம்பர் மாத இறுதிக்குள் தடுப்பூசி வெளிவரும் என்றும், ஜனவரி மாதத்தில் இத்தாலிக்கு தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் இத்தாலியில் 4,89,987 பேர் கொரோன வைரசிலிருந்து மீண்டு வந்துள்ளனர், அதே நேரத்தில் நேற்று வரை நாட்டின் இறப்பு எண்ணிக்கை 47,870 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் மொத்தம் 2,50,186 பேர் பரிசோதிக்கப் பட்டுள்ளனர், இவர்களுள் 14.4% பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இத்தாலியின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.