2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது…(வீடியோ)

டில்லி:

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. ராணுவ வீரர்கள் இன்று தங்களது வாக்குகளை செலுத்தினர்.

17-ஆவது மக்களவைத்  தேர்தல் வரும் ஏப்ரல் – மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி மே 6-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில் 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.  அருணாச்சல பிரதேசத்தின் வடகிழக்கு கிழக்குப் பகுதியில் உள்ள இந்திய திபெத்திய எல்லை போலீசார் (ITBP) லோதிப்பூரில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ வாக்குச் சாவ டியில், தங்களது தபால் வாக்குகளை இன்று  பதிவு செய்தனர்.

இதன் காரணமாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.