இந்தோ, திபெத் பாதுகாப்பு படை முகாமில் சம்பவம்: சக வீரர்கள் 5 பேரை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்த வீரர்

ராய்ப்பூர்: இந்தோ, திபெத் பாதுகாப்பு படை ஒருவர் சக வீரர்கள் 5 பேரை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நாராயண்பூர் என்ற பகுதியில் உள்ள பாதுகாப்பு படை முகாமில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அதனை சத்தீஸ்கர் டிஜிபி அவஸ்தி உறுதி செய்திருக்கிறார்.

வீரர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில்  மசூதுல் ரகுமான் வீரர் ஆவேசம் அடைந்திருக்கிறார். கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுற்றியிருந்த சக வீரர்கள் 5 பேரை சரமாரியாக சுட்டுத்தள்ளியிருக்கிறார்.

பின்னர் அதே துப்பாக்கியால் சுட்டு தமது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.