காஷ்மீர் லடாக்கில் 17ஆயிரம் அடி உயரத்தில் ராணுவ வீரர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை – வீடியோ

ஸ்ரீநகர்:

நாடு முழுவதும் இன்று 71வது ஆண்டு குடியரசுத்தினம் கொண்டாடப்பட்டு வரும் வளையில், காஷ்மீர் மாநிலம் லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்,  17ஆயிரம் அடி உயரத்தில் தேசிய கொடி ஏற்றி குடியரசுத் தின விழாவை கொண்டாடினார்.

லடாக்கில் 17 ஆயிரம் அடி உயரத்தில் எல்லை பாதுகாப்புப்படை வீர‌ர்கள் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிரிலும் குடியரசுத் தின விழாவை தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தனர். அப்போது ‘பாரத் மாதா கி ஜெய்’ மற்றும் ‘வந்தே மாதரம்’ என்று கோஷமிட்டனர்.

அது தொடர்பான வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்….

https://twitter.com/i/status/1221266797036539904

நன்றி: ANI