இது நம்ம ஆளு.. இப்போதைக்கு இல்லே!

a

சிம்பு-நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு வெளியீடு மூன்று வருடங்களாக தள்ளிக்கொண்டே போய், சமீபத்தில் மே 20 அன்று ரிலீஸ் என்றார்கள்.

அன்று வெளியாகும் விஷாலின் ‘மருது’வுடன், ‘இது நம்ம ஆளு’ மோதும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது மீண்டும் ‘இது நம்ம ஆளு’ தள்ளிப் போயிருக்கிறது.

“அதிகமில்லை…  ஏழு நாள் தள்ளி 27ம் தேதி ரிலீஸ் செய்கிறோம்” என்று இப்போது சொல்கிறாரகள் படக்குழுவினர்.

சென்னை விமான நிலைய மேற்கூரை கண்ணாடி உடைந்ததைவிட அதிகமுறை நடந்திருப்பது, இந்த இ.ந.ஆ. பட தள்ளிவைப்புதான்.