டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக முதல்வர் அறிவித்தது பொய்யா?

நெட்டிசன்:

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.  சிவசங்கர் எஸ்.எஸ்  அவர்களது முகநூல் பதிவு:

மூடுவதற்கு பதிலாக இடமாற்றம்!: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் காட்டாத்தூர் கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை” திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு.

இப்போது எது புதிய கடை என்ற சந்தேகம் எழுந்தது. விசாரித்தால் ஆண்டிமடத்தில் இருந்த கடை இங்கு இடமாற்றம் ஆகிறது.

அடுத்த செய்தி.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தானில் இருந்த டாஸ்மாக் கடையை அரங்கோட்டை கிராமத்திற்கு மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு.

இப்போது இடமாற்றம் செய்ய வேண்டிய தேவை என்ன என்ற சந்தேகம்.

முதல்வராக பொறுப்பேற்ற அன்று எடப்பாடி பழனிசாமியின் பிரம்மாண்ட அறிவிப்பு,” 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்”.

மூடப்படும் என்று அறிவித்து விட்டு “இடமாற்றம்” நடக்கிறது.

# பொய்யான அறிவிப்பு கொடுத்துள்ள முதல்வர் !