சென்னை: இந்தியா டுடே சார்பில் வெளியிடப்பட்டுள்ள சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 3வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. இது அதிமுக அமைச்சர்களிடையே சந்தோஷத்தை ஏற்படுத்திஉள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சி தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

பிரபல பத்திரிகையான இந்தியா டுடே ஆண்டுதோறும், நாட்டில் உள்ள சிறந்த மாநிலங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு பட்டியல் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் ஆய்வு செய்து பட்டியல் வெளியிட்டு உள்ளது. அதில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது.  இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் சிறப்பான முறையில் செயல்படுவதாக என இந்தியா டுடே கூறியுள்ளது. அகில இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

இதற்கான விழா டிசம்பர் 5ந்தேதி நடைபெறும் என்று, அப்போது,  தமிழக அரசுக்கு விருது வழங்கப்படும்என்றும், இந்தியா டுடே சார்பில்,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வாகி சாதனை புரிந்துள்ளதற்கு முதல்வர் பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளக்கக்கூடிய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டை முதலிடமாக தேர்ந்தெடுத்து கடிதம் அனுப்பியுள்ளது.  @IndiaToday இதழ் நிர்வாகத்திற்கு தமிழக அரசு சார்பில், எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா டுடே பத்திரிகையின் இந்த வருடத்திற்கான சிறந்த ஆட்சியை வழங்கும் பெரிய மாநிலங்களில் 3வது முறையாக தமிழகம் தேர்வாகி உள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் விருது வழங்கும் விழாவில் முதல்வர் பழனிசாமிக்கு விருது வழங்கப்படவுள்ளது. இந்த செய்தியை அறிந்த அதிமுக நிர்வாகிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மற்றொரு பதிவில்,  “அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமேதொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடுதேர்வாகி சாதனை புரிந்துள்ளது.இவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம்! ” என்று பதிவிட்டுள்ளார்.