சானியா – சோயப் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

ந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சோயப் மாலிக் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா- பாக். கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் ஆகியோருக்கு கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது.  இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் சானியா கர்ப்பமானார். அப்போதிலிருந்து தனது தனது தாய்மை அனுபவத்தை அவ்வப்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

அக்டோபர் மாதம் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தேதி குறித்ததாகவும் பதிவிட்டிருந்தார். குழந்தையின் பெயருக்குப் பின்னால் தனது கணவர் மற்றும் தனது பெயர் (மிர்சா – மாலிக்) இடம் பெற்றிருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையல் சானியாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதை சோயப் மாலிக் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.மேலும், “எப்போதும் போல என் மனைவி சானியா மிர்சா நலமாக உள்ளார். உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி”  என தெரிவித்துள்ளார். இதையடுத்து சோயப் மற்றும் சானியாவையும் குழந்தையையும் வாழ்த்தி சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்

குழந்தை புகைப்படத்தை சோயிப் மாலிக் வெளியிடவில்லை. ஆகவே குழந்தையின் புகைப்படத்தை அவர்களது ரசிகர்கள் காத்திருப்பதாகவும் பலர் பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.