தன் தாயின் கருப்பையில் தனது குழந்தையை பெற்றெடுத்த பெண்

நீண்ட நாட்களாக குழந்தை இன்றி தவித்து வந்த பெண்ணிற்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.

woman

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணிற்கு, கடந்த மே 18, 2017ல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. புனே கேலக்ஸி கேர் மருத்துவமனையில் தனது தாயின் கருப்பையை தனக்குள் பொருத்திக் கொண்டார் மீனாட்சி. இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது.

இதன்மூலம் ஆசியாவில் முதல் முறையாக பெண் ஒருவர், கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளார். இது உலகிலேயே 12வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் தான் பிறந்த அதே கருப்பையில் தனது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய கேலக்ஸி கேர் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஷைலேஷ் புண்டம்பேகர், ” கருப்பை ஆனது புதிய பெண்ணுறுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 32 வாரங்களுக்கு பிறகு, மீனாட்சிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளது “ என்று கூறினார்.

கடந்த மே 2017ல் மீனாட்சியின் கருப்பை அகற்றப்பட்டது. ஏனெனில் அவருக்கு மூன்று முறை கருக்கலைப்பு நிகழ்ந்துள்ளது. மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள ஆரோக்கிய சூழலும் அவரிடம் இல்லை. அவருக்கு பிறந்த குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருக்கிறது.

ஆசிய பசுபிக்கில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையில் குழந்தை பெற்ற பெண் மீனாட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தருணத்திற்காகத் தான் நீண்ட காலமாக காத்துக் கொண்டிருந்ததாக மீனாட்சியும், அவரது கணவர் ஹிதேஷ் வெலண்டும் தெரிவித்துள்ளனர்.