தற்போதைய சூழலில் ஐபிஎல் ஐ மறந்து விடுங்கள் – கங்குலி

டெல்லி

எந்த விளையாட்டிற்கும் தற்போதைய சூழல் ஏற்றதாக இல்லை. எனவே ஐபிஎல் போட்டிகளை மறந்துவிடுங்கள் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் நடைபெற வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கங்குலி இவ்வாறு பதிலளித்தார்.

“தற்போதைய சூழலை  நன்கு கவனித்து வருகிறோம். அனைவரும் ஊரடங்கால் வீட்டில் முடங்கி உள்ளோம். விமானம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து வசதிகளும் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளன.

வீரர்களை பல்வேறு நாடுகளில் இருந்து அழைத்து வருவது சாத்தியமே இல்லாத ஒன்று. இச்சூழல் எந்த விளையாட்டிற்கும் உகந்ததாக இல்லை. எனவே ஐபிஎல் போட்டிகளை மறந்துவிடுங்கள்” என சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாளை கலந்தாலோசித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முடிவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கைவிட வேண்டும் என ஜப்பான் பிரதமர் கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது…