ஐபோன் 12 ப்ரோ: துபாய் சென்று வாங்கி வரும் செலவு இந்திய விலையை விட மலிவு

டில்லி

போன் 12 ப்ரோவை துபாய்க்குச் சென்று வாங்கி திரும்பி வரும் செலவு இந்திய விலையை விட மலிவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் கடந்த 13 ஆம் தேதி அன்று நான்கு புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.  அவை ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன்12 ப்ரோ மாக்ஸ் ஆகியவை ஆகும் .  தற்போது இந்தியாவில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ ஆகியவை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.  இந்த போன்களின் விற்பனையை ஊக்கிவிக்க நிறுவனம் ஐபோன் 11 வரிசையை நிறுத்தி உள்ளது.

இந்தியாவில் ஐபோன் 12 இன் விலை ரூ.69,900லிருந்து தொடங்குகிறது.  அதே வேளையில் ஐபோன் 12 ப்ரோ ரூ.1.19,900லிருந்து தொடங்குகிறது.    முந்தைய மாடல்களோடு ஒப்பிடுகையில் இந்த விலைகள் மிகவும் அதிகமாக உள்ளது.  இன்னும் சொல்லப்போனால் துபாய்க்குச் சென்று இந்த ஐபோன் 12 ப்ரோ வை வாங்கி திரும்பி வரும் செலவு இந்திய விலையை விட குறைவாக உள்ளது.

அது எப்படி என இங்கு பார்ப்போம்.

இந்தியாவில் ஐபோன் 12 ப்ரோ 128 ஜிபியின் விலை ரூ.1,19,000

துபாயில் இந்திய ரூபாய்  மதிப்பின்படி இதே போனின் விலை ரூ.84,000

துபாயில் நவம்பர் 6 ஆம் தேதிக்குப் பிறகு இந்த போன் விற்பனைக்கு வருகிறது   எனவே டில்லி அல்லது கொல்கத்தாவில் இருந்து துபாய்க்குப் போகவர டிக்கட் விலை ரு.18000 ஆகிறது.

இண்டிகோ விமானத்தில் துபாய் சென்று வர ரூ. 17929

ஐபோன் விலை ரூ.84000

இதர செலவுகள் ரூ.10,000

மொத்தம் ரூ.1,11,929

மிச்சமான தொகை சுமார் ரூ.8000