”10 நாட்கள் கேட்டோம்…ஆனல் 2 நாட்களில் செய்து முடித்துள்ளோம்…” – விவசாய கடன் தள்ளுபடி குறித்து ராகுல் டிவீட்

ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ததற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி டிவிட்டரில் தெரிவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிப்பெற்று பொறுப்பேற்ற நிலையில் மூன்று மாநிலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

rahul

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று சமீபத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் ஆளும் பாஜகவை பின்னுக்கு தள்ளி ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்த மத்தியப் பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் அரசு விவசாய கடன்களை ரத்து செய்தன. மத்தியப்பிரத்தேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வரையிலான கடன்களையும், சத்தீஸ்கரில் ரூ.6,100 கோடி வரையிலான விவசாய கடன்களையும் ரத்து செய்து அம்மாநில முதல்வர்கள் உத்தரவிட்டனர்.

இவர்களை தொடர்ந்து ராஜஸ்தானிலும் விவசாய கடன்களை ரத்து செய்து காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிக்கப்பட்டது போன்று பதவிஏற்ற இரண்டே நாட்களில் ரூ.18 ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்து, அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மூன்று மாநிலங்களிலும் பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையிலான அரசு விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ததை ராகுல்காந்தி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் , “ ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் மாநிலங்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது சிறப்பானது. நாங்கள் 10 நாட்கள் கேட்டோம். ஆனால் 2 நாட்களிலேயே செய்து முடித்துள்ளோம் “ என பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸின் இந்த நடவடிக்கைக்கு போட்டியாக அசாமில் ரூ.600 கோடி விவசாயக்கடனும், குஜராத் மாநிலத்தில் ரூ.625 கோடி மின் கட்டணமும் தள்ளுபடி செய்து அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.