197 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர் நடக்க பழகும் வீடியோ வைரல்!

நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர் 197 நாட்கள் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சிக்கு பிறகு பூமிக்கு திரும்பியதும், புதிதாய் பிறந்த குழந்தை போல் நடக்க பயிற்சி எடுத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

astronautwalkearth

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் ஒன்றாக இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளது. அந்த விண்வெளி ஆய்வு மையம் விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக் கோள்கள் மற்றும் விண்ணியல் தகவல்களை ஆய்வு செய்யக்கூடியது. இந்த விண்வெளி மையத்திற்கு சுழற்சி முறையில் ஒவ்வோரு நாட்டு விஞ்ஞானிகளும் சென்று அங்கு தங்கியிருந்து அதன் பணிகளை செய்து வருகின்றது. அவ்வபோது அந்த விஞ்ஞானிகள் பூமிக்கு திரும்புவதும் வழக்கம்.

அதுபோலவே நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர் பியூஸ்டல் 197நாட்கள் விண்வெளி மையத்தில் தங்கி ஆராய்ச்சி செய்து வந்த நிலையில் தற்போது பூமி திரும்பி உள்ளார். கடந்த மே மாதம் விண்வெளி மையத்திற்கு சென்ற அவர் கடந்த மாதம் பூமிக்கு திரும்பினார். ஆனால், பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரரால் இயல்பாக நடக்க முடியவில்லை. பிறந்த குழந்தை முதன் முதலில் நடக்க பயில்வது போன்று அந்த வீரரும் நடக்க கற்றுக்கொண்டு வருகிறார்.

புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் மிதந்துகொண்டே இருந்துவிட்டு பூமிக்கு வந்ததும் நடப்பது கஷ்டமாக இருப்பதாக பியூஸ்டல் தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார். பூமிக்குத் திரும்பியதும் நாசா விஞ்ஞானிகள் முன்னிலையில் கண்ணை மூடிக்கொண்டு பியூஸ்டல் நடக்க முயன்றுள்ளார். அப்போது அவர் இயல்பாக நடக்க முடியாமல் திணறித்திணறி நடந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர்களுக்கு பூமிக்கு வந்ததும் சில நாட்களுக்கு தரையில் கால் வைத்து நடப்பது கடினமாக இருக்கும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி