மற்ற போலீஸ் படம் போல் இல்லாத புதுமையான படம்!: ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் பற்ற கார்த்தி 

துரங்க வேட்டை என்ற வித்தியாசமான – வெற்றிப்படத்தை அளித்த  எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும்,  ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம், வரும் 17ம் தேதி வெளியாகிறது.
இதையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஹீரோ கார்த்தி  பேசினார். அப்போது “உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கறது. ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையைச் சொல்லும் படம்.

கண்டிப்பான காவல்துறை அதிகாரி தீரனாக வருகிரேன். அவரது  வாழ்க்கையை மாற்றிய ஒரு வழக்குதான்  இந்த படத்தின் கதை.

காவல்துறையினரை, சூப்பர்மேன் என்று பார்க்கிறோம்.. அல்லது வேறு விதமாக விமர்சிக்கிறோம். ஆனால்  நமது வீட்டில் அண்ணனோ, தம்பியோ அல்லது நண்பர்களோதானே காவல்துறியல் பணியாற்றுகிறார்கள்..

அப்படி அவர்களும் நம்மில் ஒருவர்தான் என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிரோம். நாம் தினமும் 8 மணி நேரம் வேலை செய்து சம்பளம் வாங்குகிறோம். ஆனால் காவல்துறை தினமும் 22 மணி நேரம் பணிபுரிகிறார்கள்.  அவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது.

போலீஸ் டிரைனிங் நேரத்தில்  அவர்கள் போலீசாக மாற மட்டும்தான் பயிற்சி அளிக்கிப்படுகிறது. அவர்கள் எப்படிபட்ட போலீசாக இருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய சூழ்நிலைதான் தீர்மானிக்கிறது.

நான் ‘சிறுத்தை’ படத்திற்காக காவல்துறை அதிகாரி ஒருவரை சந்தித்தேன். எதையும் எதிர்க்கொள்ளும் அவருடைய குணம் எனக்கு பிடித்திருந்தது. அதைத்தான் இந்தப் படத்தின் பல காட்சிகளில் நான் வெளிப்படுத்தியிருக்கிறேன்.

நான் நடித்த படங்களிலேயே ‘நான் மகான் அல்ல’ படத்தில் நான் செய்த கதாபாத்திரம்தான் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நான் நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பேனோ அப்படியேதான் அந்தப் படத்தில் நடித்திருந்தேன்.

இந்தப்படத்தல் தீரன் வீட்டில் இருக்கும்போது ‘நான் மகான் அல்ல’ படத்தில் வருவது போல ஒரு பையனாக இருப்பான். போலீசாக ஸ்டேஷனில் இருக்கும்போது வேறு ஒருவிதமாக வெளிப்படுவான்.

மற்ற படங்களில் வருவது போல், காவல்த அதிகாரி என்றால் சத்தமாக பேசுவது போன்ற விஷயங்களை தவிர்த்து நிஜமாகவே போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்த படத்தில் இருக்க நான் முயற்சி செய்துள்ளேன்” என்று உற்சாகமாகப் பேசி முடித்தார் கார்த்தி.