தனுஷின் 40வது படத்திற்கு ‘உலகம் சுற்றூம் வாலிபன்’ டைட்டிலா..? மறுக்கும் படக்குழு…!

அசுரன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜும் தனுஷும் இணைந்து ஒரு புதிய படத்தில் பணிபுரிகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் தொடங்கப்பட்டுள்ளது.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசி தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுடன் ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி என்பவர் ஜோடியாக நடிக்கிறார். வடசென்னை படத்தை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் தனுஷ் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்திற்கு ‘உலகம் சுற்றூம் வாலிபன்’ என்று எம்.ஜி.ஆர் பட டைட்டிலை வைத்திருக்கிறார்கள் என்று தகவல் ஒன்று வெளியானது. ஆனால், இச்செய்தியை படக்குழு மறுத்துள்ளது.

இந்தப் படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ என்ற ஹாலிவுட் நடிகர் நடிக்கவுள்ளார். இவர் கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்ற உலக பிரபலமடைந்த வெப் சிரீஸில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அல்பாசினோ என்ற ஹாலிவுட் நடிகரை அனுகினார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Dhanush, Karthick subburaj, London, santhosh narayanan, Ulagam sutrum valiban
-=-