உறுதியானது விஜய்-அட்லி கூட்டணி..!

vijay-atlee

விஜய் இயக்குனர் அட்லீயுடன் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கவுள்ளது. இத்தகவலை தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியின் மனைவி ஹேமா ருக்மணி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இப்படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என சொல்லப்படுகிறது. மேலும் இப்படம் தொடர்பான முறையான அறிவிப்பு தீபாவளி கழித்து வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.