சுஷாந்த் சிங் மீது அன்பு மழை பொழிகிறது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி….!

ஜான் க்ரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்” என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் தில் பேச்சாரா. சுஷாந்த் சிங் நடிப்பில் உருவான கடைசிப் படம் இது .

ஜூலை 24-ம் தேதி இத்திரைப்படம் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் ஜூலை 6-ம் தேதி ‘தில் பெச்சாரா’ ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டது. பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் இந்த ட்ரெய்லரைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

உலக அளவில் அதிகம் பேர் விரும்பிய ட்ரெய்லராக தில் பேச்சாரா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் படத்தின் ட்ரெய்லருக்கு 36 லட்சம் லைக்குகள் கிடைத்திருக்கும் நிலையில் 24 மணி நேரத்தில் சுஷாந்தின் தில் பேச்சாரா ட்ரெய்லருக்கு 2.94 கோடி பார்வைகள், 60 லட்சம் லைக்குகள் கிடைத்திருக்கின்றன. இதன் மூலம் உலக அளவில் சுஷாந்த் சிங்கின் கடைசி படட்ரெய்லர் சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பாக ‘தில் பெச்சாரா’ படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில் “சுஷாந்த் மற்றும் ‘தில் பெச்சாரா’ படத்தின் மீதான அன்பு மழை பொழிகிறது” என்று தெரிவித்துள்ளார்.