வளுக இம்சை தாங்க முடியல’ இப்படி ஓர் தலைப்பில் படம் தயாரித்து வருகிறது  ரூல் பிரேக்கர்ஸ்  மற்றும்  தியா சினி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள்.

இந்த நிறுவனங்களின்  சார்பில் சக்திவேல், ஜெகன் நாராயணன் ஆகியோர் இருவரும்  இணைந்து தயாரித்துள்ளனர்.

இவர்களில் சக்திவேல் ‘கந்தகோட்டை’, ‘ஈகோ’ ஆகிய படங்களை இயக்கியவர்.  அவரிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த வி.என். ராஜசுப்ரமணியன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் ‘நான் சிவனாகிறேன்’ படத்தில் நாயகனாக நடித்தவர். பாலாவின் இயக்கத்தில் ‘பரதேசி’ படத்தில் அதர்வாவுடன் நடித்தவர். நாயகியாக சஹானா நடித்துள்ளார்.  விஜய் டிவியின்  ‘கனா காணும் காலங்கள்’  புகழ் சிவகாந்த் முழு  நீள காமெடியனாக வந்து கலகலப்பூட்டியிருக்கிறார்.

ஏ.வி.வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். மலேசியப் பாப் இசைக் கலைஞரான கேஷ் வில்லன்ஸ்  இசையமைத்துள்ளார். ‘மிருதன் ‘படத்திற்கு படத் தொகுப்பு செய்த வெங்கட்ரணன் இந்தப் படத்திற்கு படத் தொகுப்பு பணியைச் செய்துள்ளார். நடனம் –‘காதல்’ கந்தாஸ். பாடல்கள் – விவேகா மற்றும் மணி வில்லன்ஸ். எழுத்து, இயக்கம் – வி.என்.ராஜசுப்ரமணியன்.

‘இவளுக இம்சை தாங்க முடியல’ என்ற இந்த படம் இளைஞர்களை மையப்படுத்தி காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்தார்.

இப்படத்தின் டீசர் ரம்ஜான் அன்று வெளியானது.