ஜெ.அன்பழகன் மறைவு: முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ், கே.எஸ்.அழகிரி, திருமா, டிடிவி இரங்கல்…

சென்னை:

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகன் இன்று காலை  சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

எடப்பாடி பழனிச்சாமி (தமிழக முதல்வர்)
திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓ.பன்னீர்செல்வம் (துணை முதல்வர்)
சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் முன்னோடி நிர்வாகியுமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று காலை மருத்துவ சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.
கே.எஸ்.அழகிரி  (காங்கிரஸ்)

அவர்கள் மறைவால் வாடும் தி.மு.க. தலைவர் தளபதி ஸ்டாலின்  அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும், குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொல்.திருமாவளவன் (விசிக)

திமுக சென்னை. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் காலமான தகவல்மிகுந்த கவலையளிக்கிறது. அவர் கொரோனாவுக்கு இரையாகியுள்ளார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. திமுகவினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்குஎனது ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

டிடிவி தினகரன் (அமமுக)

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவால் அவர் மறைந்தது நமது வேதனையை அதிகமாக்குகிறது.

கொரோனா ஆபத்து சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், மக்கள் நல நிகழ்ச்சிகளில் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும் பொது மக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன். அதன்படி தொடர்ந்து நடப்பதுதான் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ (மதிமுக)

எப்போதும் சிரித்த முகமும் – இரும்பு நெஞ்சமும் கொண்ட ஜெ.அன்பழகன் MLA அவர்கள் மறைந்தார் என்ற செய்தியை தாங்கிக் கொள்ள முடியவில்லை”

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இரங்கல் செய்தி