றாவது முறையாக முதல்வர் பதவி ஏற்றவுடன், முதன் முறையாக டில்லி சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்பது உட்பட, 29 கோரிக்கைகள் அடங்கிய கோப்பினை மோடியிடம் ஜெயலலிதா அளித்தார்.
160614124439_jayamodidelhijayalalitha_640x360_govt_nocredit
முதலவர்ஜெயலலிதா முன்வைத்துள்ள கோரிக்கைகளில் சில..
தமிழக வெள்ள சேதங்களுக்கு 25,912 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டு தமிழக அரசு இதுவரை இரண்டு முறை மனு கொடுத்துள்ள போதிலும் மத்திய அரசு 1737 கோடி நிதியை மட்டுமே கொடுத்துள்ளது. முழுமையான நிவாரண தொகையை மத்திய அரசு கொடுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்பது உட்பட 29  கோரிக்கைகள் அடங்கிய கோப்பினை அவர் மோடியிடம் அளித்தார்.
அக் கோரிக்கைகளில் சில..
பெட்ரோலிய பொருட்கள் மீதான சரக்கு & சேவை வரியை ரத்து செய்ய வேண்டும்
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்காமல் தடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிக்கை
தமிழக நதிகளை இணைக்க மத்திய அரசு உதவ வேண்டும்
கர்நாடக அரசு மேகதாதுவில் தடுப்பணை கட்ட தடை விதிக்க வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்
மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க உதவ வேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவில் அதிமுகவின் நிலையில் மாற்றம் இல்லை
மருத்துவ பொது நுழைவுத் தேர்வு கூடாது
முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்
தமிழக அரசு பரிந்துரைத்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வேண்டும் ஆகியவை ஜெயலலிதா முன்வைத்த சில கோரிக்கைகளாகும்.