தமிழக சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பேற்றார் ஜெ.ராதாகிருஷ்ணன்… விஜயபாஸ்கர் வாழ்த்து

சென்னை:

மிழக சுகாதாரத் துறைச் செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட ஜெ.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணி அளவில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்தவர் பீலா ராஜேஷ். இவரது ஆணித்தரமான  கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள் ஆட்சியாளர்களுக்கு இக்கட்டான  சூழல்களை உருவாக்கியது.   மேலும் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, கொரோனா பாதிப்பு குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்தார். இது ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று காலையிலேயே தமிழகஅரசு,  பீலா ராஜேஷை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து தூக்கி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக இடமாற்றம்  செய்து அறிவித்தது.

அவரது இடத்துக்கு முன்னாள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து,  இன்று மாலை  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக பொறுப்பேற்றார். அவருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இவர், 2012 – 2019 ஆம் ஆண்டுகளில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.