ஜெ. வெற்றிக்கு திருப்பதியில் நமீதா முடிகாணிக்கை !

--

திருப்பதி:

மிழக சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதற்காக திருப்பதி திருமலைக்குச் சென்று ஏழுமலையானுக்கு  நேர்த்திக்கடன் செலுத்தினார் நடிகை நமீதா.

நடிகை நமீதா சமீபத்தில்  ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபடவில்லை என்றாலும், அவ்வப்போது  ஊடகங்களில் அதிமுகவுக்கு ஆதரவாகப் பேசி வந்தார்.

 

 

1

தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும்போது அவர் திருமலைக்குச் சென்று ஏழுமலையான தரிசித்தார். தரிசனம் முடிந்து வெளியில் வந்த அவர், அதிமுகவின் வெற்றிக்காவும் மீண்டும் ஜெயலலிதா முதல்வராகவும் பிரார்த்தனை செய்தேன். அதற்காக நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டிக்கொண்டேன் என்று தெரிவித்தார்.

தேர்தலில் வென்ற  ஜெயலலிதா இன்று முதல்வராக பதவி ஏற்கிறார். இதையடுத்து நேற்று நேற்று திருமலைக்குச் சென்ற நமீதா, ஏழுமலையானுக்கு நன்றி செலுத்தினார்.

2

அப்போது நமீதா, “நல்ல பிரார்த்தனைகளைக் கடவுள் எப்போதும் நிறைவேற்றித் தருவார். அதுபோலவே “அம்மா” முதல்வராக ஆனதும் நடந்திரக்கிறது.

அம்மாவின் ஆட்சியில் தமிழகம் மிகச் சிறப்பான வளர்ச்சியைப் பெறும். தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அம்மாதான்,” என்று கூறினார்.

3

திருப்பதி திருமலையில் வேண்டுதல் நிறைவேறினால், முடிகாணிக்கை செலுத்துவது வழக்கம். அதேபோல நமீதாவும் வேண்டிக்கொண்டாராம். அதே நேரம் இப்படி வேண்டிக்கொள்பவர்கள், முழுவதுமாக தலைமுடியை காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக, ஓரிரு முடிகளை காணிக்கை செலுத்துவதும் உண்டு. இது “பூமுடி அளிப்பது” என்று சொல்லப்படும். அதுபோல நமீதாவும் பூமூடி அளித்தி தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றியிருக்கிறார்.