சிங்கப்பூர்,

சிங்கப்பூரின் ஆக்டிங் ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜே.ஒய்.பிள்ளை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி டான் கெங் யாமு பதவிக்காலம் முடிவடைந்தை தொடர்ந்து, இந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெ.ஒய்.பிள்ளை புதிய ஜனாதிபதியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இவர் 1965ம் ஆண்டு புதிதாக உருவான சிங்கப்பூர் அரசில் பணியில் சேர்ந்து, அரசு துறைகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

இதையடுத்து  ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகராக கடந்த 2005ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். சிங்கப்பூர் ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கையில், இவர்தான் நாடாளு மன்ற நடவடிக்கைகளை திறம்பட நடத்தி வந்தார்.

இதன் காரணமாக தற்போது ஜனாதிபதியின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, செப்டம்பர் 1 முதல்  புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் வரை ஆக்டிங் ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.

இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.