மிந்த்ரா-ஜபாங் ஊழியர்கள் பணி நீக்கம்? நிர்வாகம் நடவடிக்கை

டில்லி:

ணிக வளர்ச்சி இல்லாததால், மிந்த்ரா, ஜபாங் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. சுமார்  10 சதவிகிதத்திற்கும் குறைவான ஊழியர்களையே பணி நீக்கம் செய்யப்போவதாக மிந்த்ரா-ஜபாங்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த் நாராயணன்  அறிவித்து உள்ளார். இது அந்நிறுவன ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜபாங், மிந்தரா  ஆகிய இரு நிறுவனங்களும் கடந்த 2016ம் ஆண்டு இணைந்தது.  ஆனாலும் தொடர் வணிக வளர்ச்சி ஏற்படாததால், ஊழியர்களை  பணி நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு காலமாக  ஜபாங் வணிகத்தில் வளர்ச்சி இல்லாததை தொடர்ந்து, அந்த நிறுவன மும் மிந்த்ரா நிறுவனமும் இணைய முடிவு செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் தொடர் நடவடிக்கையாக மின்த்ரா மற்றும் ஜபாங்கின் செயல்பாடுகளை முழுவதுமாக பெங்களூருவுக்கு மாற்றுவது குறித்தும், ஊழியர்களை பணி நீக்கம் செய்வது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூர் பணிமாற்றம் விரும்பாத  ஊழியர்களுக்கு கிராஜுவிட்டியுடன் மூன்று மாத ஊதியம் மற்றும் பணியிலிருந்த ஒவ்வொரு வருடத்திற்கும் 15 நாட்கள் ஊதியமும் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே  சமீபத்தில், தவறான நடத்தைக் குறித்த குற்றச்சாட்டில் சிக்கிய ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் முதன்மை செயல் அதிகாரியுமான பின்னி பன்சால் தமது முதன்மை செயல் அதிகாரி பொறுப்பை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது.