‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார் ஜாக் காலிஸ்!

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ், ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியின் புகழ்பெற்ற ஆல்ரவுண்டராக கோலோச்சியவர் ஜாக் காலிஸ். இவர், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் அதிகளவு ரன்களைக் குவித்தவர் மற்றும் உலகளவில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார் காலிஸ்.

இந்நிலையில், ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் காலிஸ். தென்னாப்பிரிக்க அணியில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 45 சதங்களை அடித்திருக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் 13289 ரன்களும், ஒருநாள் போட்டியில் 11579 ரன்களும் எடுத்துள்ளார். மேலும், இருவகை கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 250 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.