‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிக்கு வில்லனாகிறாரா பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராஃப்….?

தர்பார் படத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் வில்லனாக நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது முதன்மை வில்லன் கேரக்டரில் ஜாக்கி ஷராஃப் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘அண்ணாத்த’ திரைப்படம் கொரோனா காரணமாக 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று சன் பிக்சர்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி