சென்னை,

ரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

மத்திய அரசு ஏற்கனவே அகவிலைப்படியை உயர்த்தி உள்ள நிலையில், தமிழக அரசும்.  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து உள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1 முதல் ,முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக 244 முதல் 3080 வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.122 முதால் 1546 வரை உயரும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது அரசு ஊழியர்களின் போராட்டம் நடைபெற்று வருவதன் காரணமாக இந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.