‘ஜாக்பாட்’ திரைப்பட பாடல்கள் வெளியானது….!

சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் , கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜாக்பாட்’ .

படத்தில் ஜோதிகாவோடு நடிகை ரேவதி, நடிகர்கள் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்ய , விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். படத்தின் எடிட்டர் விஜய் .

இந்நிலையில் இத்திரைப்படத்தின் இடம்பெற்றுள்ள பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.