அரசு ஊழியர்கள் போராட்டம்: சட்டமன்றத்தில் இருந்து திமுக, காங் வெளிநடப்பு

சென்னை:

ட்டமன்ற கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்ச்சியின்போது, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் உண்ணா விரத போராட்டம் குறித்து திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

அப்போது,  15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழிலக வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேச வேண்டும் என்று கூறினார்.

இதுதொடர்பான விவாதத்தின்போது,  ஜாக்டோ – ஜியோ ஊழியர்களின் கோரிக்கைகளை  தமிழக அரசு ஏற்றால் நாங்கள் அவர்களை தூண்ட வேண்டிய அவசியம் இருக்காது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

பின்னர், முதல்வர் உண்ணாவிரதம் இருந்து வரும் அரசு ஊழியர்களை  நேரில் சந்தித்து பேசாததை கண்டித்து திமுக, காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்து, சபையில் இருந்து  வெளி நடப்பு செய்தனர்.

முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்  நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.