பழைய ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோ அமைப்பு மீண்டும் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு

சென்னை:

ழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோ மீண்டும்  நவம்பர் 27 முதல் காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளன.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்- ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் கூட்டு செயல் குழு சார்பில் கடந்த ஆண்டு (/017) செப்டம்பர் 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

அதைத்தொடந்து கடந்த மே மாதம் 8ந்தேதி தலைமைச்செயலக முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து,  கடந்த ஜூன் மாதம் காலவரையற்ற உண்ணா விரத போராட்டமும் நடைபெற்றது.

இதுவரை பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், தமிழக அரசு அவர்களது கோரிக்கைகள் குறித்து வாய் திறக்க மறுத்து வருகிறது.

இந்த நிலையில், மீண்டும் போராட்டதில் குதித்துள்ளது.