சென்னை:

ரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் இன்று 2-வது நாளாக  தொடர்ந்து வருகிறது. இன்றைய தினம் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே  பல இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

பழைய ஓய்வூதியம், நிலுவைதொகை உள்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நேற்று முதல் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டத்தில், சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக ஜாக்டோ, ஜியோ அமைப்பு தெரிவித்து உள்ளது.

ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக நேற்று முதல் பல இடங்களில் தொடக்கப்பள்ளிகள் செயல்படாமல் முடங்கி உள்ளது.  ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் அதிகளவு பங்கேற்றதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல அரசு ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால், அரசு பணிகளும் முடங்கி உள்ளன.

சென்னை எழிலகம், பனகல் பூங்கா உள்பட முக்கியமான பகுதிகளில் அரசு துறை அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாததால் பணிகள் முடங்கி உள்ளன.

தமிழகம் முழுவதும் இன்று பல இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.  அனைத்து மாவட்டத்திலும் தாலுகா அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில், சென்ட்ரல், பாரிமுனை, எழும்பூர  அரசு ஊழியர், ஆசிரியர்கள் திரண்டு போராட் டத்தில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியல் போராட்டத்தை யொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

26-ந்தேதி குடியரசு தினத்தன்று சென்னையில் கூடி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்து அறிவிப்போம். எங்களை அழைத்து அரசு பேசி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.