சென்னை:

ரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், இன்று  முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர்  விரைவில் நல்ல முடிவு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு ஊரியர்கள்,  ஆசிரியர்கள்  கடந்த 22 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

முதல்வருடனான சந்திப்பு முடிந்ததை அடுத்து வெளியே வந்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘அனைத்துத் துறை அதிகாரிகள் முதல்வருடனான சந்திப்பில் கலந்து கொண்டார்கள். தற்போது நடந்து வரும் ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்’ என்று கூறினார்.