மதுரை,

ரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

7ஆவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும், தமிழக அரசின் 8வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும், தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ள தாக ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு ஏற்கனவே  அறிவித்திருக்கிறது.

இதற்கிடையில், தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. அதையடுத்து நேற்று முதல்வர் பழனிச்சாமியுடனும் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இந்த கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை. அதன் காரணமாக, ஜாக்டோ -ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாகவும், மற்றொரு தரப்பினர் இன்றுமுதல் வேலை நிறுத்தம் தொடரும் என்றும் அறிவித்தனர்.

 

இந்நிலையில் இன்று தமிழகத்தில் பல இடங்க ளில் அரசு அலுவலகங்களும், பள்ளிகளும் இயங்காமல் முடங்கியது.

இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் சேகர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை, அவசர வழக்காக விசாரித்த நீதிபதி, அரசு ஊழியர்கள்  வேலை நிறுத்தத்தை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று கூறி போராட்டத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.

மேலும் வரும் 14-ம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பின் செயலாளர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார்.