கன்னிப் பெண்களும் முத்திரை உடையாத புட்டியும் : கமெண்ட் அடித்த பேராசிரியர் நீக்கம்

.
கொல்கத்தா

ன்னிப் பெண்களையும் முத்திரை உடைபடாத புட்டிகளையும் ஒப்பிட்ட பேராசிரியரை ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் பணிநீக்கம் செய்துள்ளது.

கொல்கத்தாவில் அமைந்துள்ள பல்கலைக்கழகமான ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கனக் சர்கார் என்னும் பேராசிரியர் பணி புரிகிறார். கனக் சர்கார் சர்வதேச உறவுப் பிரிவில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு சமுக வலை தளமான முகநூலில் கணக்கு உள்ளது. அதில் இவர் பிரபலமாக இருந்துள்ளார். அத்துடன் தொடர்ந்து பதிவுகள் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சமீபத்தில் ஒரு பதிவில் கனக் சர்கார், ”நீங்கள் யாராவது முத்திரை (சீல்) உடைக்கப்பட்ட பால் புட்டி அல்லது மருந்து அல்லது பிஸ்கட்டுகள் வாங்குவீர்களா? அது உங்கள் மனைவிக்கும் பொருந்தும். ஒரு பெண் உடல்கூற்றின் படி முத்திரையுடன் படைக்கப்பட்டுள்ளார். அதனால் ஒரு கன்னிப்பெண் என்பவள் முத்திரை உடைக்கப்படாத பாட்டிலுக்கு சமானவர்கள். பல பெண்களுக்கு கன்னித்தன்மைஉடைய பெண்கள் கிடைப்பது ஒரு வரமாக உள்ளது” என பதிந்திருந்தார்.

அது மாணவர்களிடையே கடும் கோபத்தை எழுப்பியது. ஒரு ஆசிரியர் இவ்வாறு பெண்களை பற்றி கீழ்த்தரமாக பதிந்தது குறித்து மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு புகார் அளித்தனர். அத்துடன் பல பெண்கள் நல அமைப்புக்களும் கனக் சர்காரின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதை ஒட்டி ஜாதவ்பூர் பல்கலைக்கழக நிர்வாகம் சர்காரை ஆசிரியர் பணியில் இருந்து உடனடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.

You may have missed