ஜடேஜாதான் அந்த விஷயத்தில் பெஸ்ட் – இது பிராட் ஹாக் கணிப்பு!

மெல்போர்ன்: இந்திய அணியில் சிறந்த ஃபீல்டர் யார் என்றால், அவர் சாட்சாத் ஜடேஜாதான் என்று தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக்.

யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா மற்றும் விராத் கோலி போன்றவர்களும் சிறப்பான ஃபீலடர்களே என்றபோதும், ஜடேஜா அனைவரிலும் பெஸ்ட் என்பது இவரின் கருத்து.

ஜடேஜா, ரெய்னா, யுவ்ராஜ் மற்றும் கோலி ஆகிய 4 இந்திய நட்சத்திரங்களில், சிறந்த ஃபீல்டர் யார் என்பதை தேர்வுசெய்யுமாறு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் பிராட் ஹாக்கிடம் அவரின் ரசிகர் ஒருவர் டிவிட்டர் மூலம் கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்த ஹாக், “அந்த நால்வருமே சிறப்பான ஃபீல்டர்கள். அவர்கள் நால்வரும் மைதானத்தின் உள்வட்டத்தில் இருந்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாகப் பந்து வீசுவேன். ஜடேஜாவின் இந்த அபாரத் திறமைக்கு அவரின் கடின ஓட்டப் பயிற்சியே காரணம்” என்றுள்ளார் ஹாக்.

பிராட் ஹாக், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.