மெல்போர்ன்: இந்திய அணியின் ஒரு நம்பிக்கையளிக்கும் டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற நிலைக்கு ஜடேஜா உருவாகியுள்ளதானது இந்திய அணிக்கு ஒரு பெரிய அனுகூலமாக பார்க்கப்படுகிறது.

இன்றையப் போட்டியில், கேப்டன் ரஹானேவுடன் இணைந்து 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஜடேஜா. ஆட்டநேர இறுதியில், 40 ரன்களுடன் களத்தில் நின்றார் ஜடேஜா. அவரின் இந்த பெர்ஃபார்மன்ஸ் இந்திய அணியின் ஆதிக்கத்திற்கு பெரியளவில் துணைபுரிந்து நிற்கிறது.

விராத் கோலி இல்லாத நிலையில், அந்த இடத்திற்கு கேஎல் ராகுலை எடுக்கலாமா? அல்லது ஜடேஜாவை எடுக்கலாமா? என்ற குழப்பம் நீடித்துவந்த நிலையில், பந்துவீச்சிலும் பயன்படுவார் என்ற நோக்கத்தில் அணியில் சேர்க்கப்பட்டார் ஜடேஜா.

தற்போது, அந்தத் தேர்வுக்கு நியாயம் செய்துள்ளார் ஜடேஜா. இந்த நிலைக்கு அவர் வருவதற்கு சில ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. கடந்த 2018ம் ஆண்டு முதல் மொத்தம் 14 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 713 ரன்களை சேர்த்துள்ளார். இதன் சராசரி 59.41%.

குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக, இவரின் பேட்டிங் செயல்பாடு தொடர்ந்து மெருகேறி வந்துள்ளது. முதலில் 8வது மற்றும் 9வது நிலையில் களமிறக்கப்பட்ட இவர், தற்போது 7ம் இடத்தில் களமிறங்குவதற்கான சிறந்த தேர்வாக மாறியுள்ளார்.