கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்தை YNOT ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜகமே தந்திரம் திரைப்படம் உழைப்பாளர்கள் தினமான இன்று மே 1-ம் தேதி ரிலீசாகும் என்றும் அதிகாரப்பூர்வமாகத் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது.


இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஜகம் சுகமடைந்ததும் ஜகமே தந்திரம் என்று தலைப்பிட்டு விரைவில் படம் திரைக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கொடிய வைரஸ் தொற்று பரவல் இல்லாமல் இருந்தால் இன்று ஜகமே தந்திரம் திரைக்கு வந்திருக்கும் என்றும் கார்த்திக் சுப்புராஜ் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார்.