வெளியானது தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ரகிட ரகிட பாடல்….!

‘பட்டாஸ்’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருந்த ‘ஜகமே தந்திரம்’ படம்.

மே 1ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேதியில் படத்தின் இரண்டாம் லுக்கை வெளியிட்டது படக்குழு.

இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு,
‘ரகிட ரகிட’ பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. மோஷன் பிக்சர் ரிலீஸாகும்போது அனைவரையும் கவர்ந்தது இந்த ரகிட ரகிட பி.ஜி.எம் என்பது குறிப்பிடத்தக்கது .

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.